THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை
க.அருணபாரதி
 
நினைவுகளின் சுமையால்
நகர்கிறது வாழ்க்கை..

நிலைக்காது எனத்தெரிந்தும்
அடங்காத வேட்கை..
 
இமைகளின்  துடிப்போடு
இயங்கிடும் நாட்கள்..
 
இனியவள் பிரிவாலே
வழியெங்கும் முட்கள்..
 
வனங்களில் திரிகின்ற
விலங்குகள் போல
 
மனம் அலைகிறதே
உன்நிழல் தேடி..
 
சினங்களை மறைத்தேன்
சிரித்தேன் திரிந்தேன்
 
கனவினில் உன்னோடு
கதை பேசியபடி..
 
துன்ப வெயிலில்
கால் சிவந்தபோது
 
தூரிகையாய் மனதை
வருடிய கனவே..
 
இன்பத் தமிழிலே
உனைபாடித் திரிவேன்
 
இருந்தாலும் இறந்தாலும்
இதுவென் உணவே...
 

Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...

தமிழா உன்கொடி ஏறுமடா...
தாய் போல
தன்னுடைய
தாய்மொழியை
நேசித்தவன்..
 
வாய்ப் பேச்சால்
உலகத்தையே
வாயடைக்க
செய்தவன்..
 
தீயருக்கும்
திகட்டாமல்
விருந்தோம்பல்
படைத்தவன்..
 
நேயம் கொண்டு
எறும்பிற்கும்
அரிசிமாக் கோல
உணவு கொடுத்தவன்..
 
சங்கம் வளர்த்து
தன் மொழியை
சரியாமல்
வளாத்தவன்..
 
எங்கும் இன்று
அடிபட்டு ஓயாமல்
அழுபவன்..
 
தமிழன்..
 
ஈழத்தில் ஓங்கிநிற்கும்
உன் கையை
பலப்படுத்து..
 
ஈனத்துரோகிகளை
கண்டெடுத்து
தளைபடுத்து...
 
வானத்தில் மலர்த்தூவ
உன்கொடி ஏறுமடா...
அந்நாளில் உன்புகழை
உலகமே கூறுமடா...

 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------