THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Friday, October 3, 2008

நினைவோடு வாழ்கிறேன்...

நினைவோடு வாழ்கிறேன்...
க.அருணபாரதி


துணையற்ற
தூணாக
வாழ்வெங்கும்
வீழ்கிறேன்...

இரவெல்லாம்
கண்விழித்து
நினைவோடு
வாழ்கிறேன்...

மறைவான
இடம்அமர்ந்து
மனம்விட்டு
அழுகிறேன்..

கரைகின்ற
கண்ணீரில்
தினம்உன்னை
காண்கிறேன்..

எனைஎனக்கே
பிடிக்கவில்லை
என்றெண்ணி
நோகிறேன்..

உனைகாண
விழித்திறந்து
உயிரோடு
சாகிறேன்...

பிறைபோல
நினைவாலே
தினம்தினம்
தேய்கிறேன்...

மறந்திடுவேன்
என்றெண்ணி
மறைந்துபோன
பெண்ணே...

நினைவுகளை
மறத்தல்
மிகக்கடினம்
உணர்ந்துகொண்டேன்...

உணர்த்தியமைக்கு
நன்றி சொல்ல
உதடுகளிருந்தும்,
உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
மறந்தவனாய்
நடித்தேன்...

Sunday, June 15, 2008

புரிந்தது புரியாமல் போனது

புரிந்தது புரியாமல் போனது
க.அருணபாரதி
 
தேர்வுக்காக படிக்க
விடுமுறை விட்டார்கள்
கல்லூரியில்...
 
வீட்டிற்கு செல்லாமல்
விடுதியிலேயே நீயிருந்ததால்
நானும் கல்லூரியிலேயே
தங்கினேன்
படிப்பதற்காக(?!)
 
மனதில் மட்டுமல்லாமல்
வெளியிலும்
மழைக்காலம் என்பதால்
பகலிலும் இருட்டாக
சுருங்கிக் கிடந்தது
வானம்
 
அந்த வானத்தின்
நிழற்குடையில்
தேர்வுக்கு படிக்க
வந்தாள்
என் தேவதை...
 
யாருமில்லா
வகுப்பறையில்
புத்தகப் பக்கங்களை விட
அவள் புன்னகை
பக்கங்கங்ளைத் தான்
அதிகம் படிக்கமுடிந்தது..
 
புரியாத பாடங்களுக்கு
என்னிடம் விளக்கங்கள்
கேட்டாள் அவள்..
விளக்கிய பின்
புரிந்ததாக சொன்னாள்..
 
அதுவரை புரிந்துவந்த
எல்லாபாடங்களும்
கல்லூரிபாடம் உட்பட
புரியாமல் போயின
எனக்கு
அவள் விளக்கம் கேட்டத்
தருணத்திலிருந்து....
 
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Monday, March 31, 2008

"இந்தியம்" எமக்கு வேண்டாம்...- க.அருணபாரதி

"இந்தியம்" எமக்கு வேண்டாம்...
க.அருணபாரதி
 
தமிழனை தினமும்
கொல்வதே வாழ்வென
சிங்களன் திரிவதை
'இனவெறி' என்கிறோம்...
 
தில்லியில் உள்ளவன்
சிங்களனுக்கு உதவி
திறைமறை காரியங்கள்
செய்வதை காண்கிறாம்..
 
முன்பு சொன்னது
இனவெறி என்போரே
பின்பு சொன்னதற்கு
பெயரென்ன சொல்வீரோ?
 
'தமிழனைக் கொல்ல
ஆயுதம் தராதே'
சொல்லி போராடும்
எங்களுக்கு பெயர்
எல்லாம் "தீவிரவாதி"....
 
கொன்று குவிக்கும்
சிங்களைக் கொஞ்சி
சீராட்டும் தில்லிதான்
தமிழரின் படுகொலைகளுக்கு 
திட்டமிட்ட "சூத்திரதாரி"...
 
கச்சத்தீவில் எங்கள்
உறவுகளை சுட்டுக்
கொன்றதிலே பங்குண்டு
என்பதால் தடுக்காத
தில்லி..
 
காவிரி, முல்லை,
பெரியாறு என்றெங்கள்
உரிமைகள் எவற்றுக்கும்
மகிழ்வுடன் நீயிட்ட
கொல்லி..
 
ஐயாயிரம் ஆண்டுமுன்பே
முப்பால் கொடுத்த
இனம் நாங்கள்
கொசுவை அடிக்க
தரவேண்டுமா சொல்லி?
 
எங்கள் சொந்தங்களை
கொல்வதில் மகிழச்சியா?
தில்லியே எம்மைஇனி
"இந்திய"த்தால் வாட்டாதே...
 
'இந்தி'யத் திமிரையும்
சூழ்ச்சியையும்
புரிந்து கொண்டோம்
இனியும் இம்மண்ணில்
"இந்தி"யத்தை நீட்டாதே...
 
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Friday, February 1, 2008

நினைவுப்பூக்கள்(கவிதை) - க.அருணபாரதி


நினைவுப்பூக்கள்
க.அருணபாரதி
 
வானத்தில் சிறகடிக்கும்
நட்சத்திர பூக்களாக
வாழ்வில் பூக்கின்றன
நினைவுப்பூக்கள்...
 
வாசம் மட்டுமல்ல
அதில் தேனும்
கண்ணீராய் இருக்கும்..
 
பாசக்கரங்கள் தொட்டால்
மெல்ல அத்தேனை
சுரக்கும்...
 
வாசம் உணரும்
போதெல்லாம்
மனம் இறந்து
பிறக்கும்..
 
மாசங்கள் கடந்தும்கூட
மனசெல்லாம்
வாடாமல் சிரிக்கும்..
 
பூக்களின் புன்னகை
பார்த்து நம் மனதும்
அதனுடன் போகும்...
 
தீக்கிரை ஆக்கினாலும்
அதன் நினைவுகள்
சருகாய் சாகும்..
 
நீருற்றி வளர்க்காமல்
விட்டாலும் - அது
தான்தோன்றித் தனமாக
வளரும்..
 
வேறினை பிடுங்க
நினைத்தால் - அது
முள்ளாய் கைகளில்
மிளிரும்..

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------