THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Wednesday, February 21, 2007

மழைத்துளியும் ஏங்குதடி...

மழைத்துளியும் ஏங்குதடி...

உன் மேல்
உள்ள ஆசையில்
தானோ என்னவோ
நீ உலா போக வெளியே
வரும் பொழுது தான்
கருகருக்கிறது வானம்,
மழையாய் உன்னை
முத்தமிட...

மழைத்துளிகள் மேலே
படாதவாறு குடை கொண்:டு
தடுத்தாய் நீ...

ஆசையோடு வந்த
மழைத்துளிகள் கீழே விழுந்து
கண்ணீர் விட்டன..

தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்க
நினைத்தது மின்னல்..

உன் சிரிப்பைக்
கண்டு அதற்கும்
வந்தது இன்னல்..

உன் பாதம் பட்டு
உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம்
அடைந்து
நதியில் கலந்தன..

 மழையைக் கூட
மகிமைப் படுத்தி
எழுதச் சொல்வது
காதல்..

எழுதும் போது
வான் மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்.....

வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும்,
மழை..

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Tuesday, February 13, 2007

உரிமையைக் கேட்டால்...

உயிர்க் காக்கும் விவசாய
பயிர் வளர்க்க நீரில்லை..

உயர்-உச்ச நீதிமன்ற
உத்தரவிட்டும் கூட
உரிமையான நீரைப்
பெற்றுத் தர ஆளில்லை...

அரசியலின் பெயராலே
தமிழனின் வாழ் வழித்து
வாக்கு மட்டும் வாங்க வரும்
வக்கற்ற கட்சிகளுக்கு
புரிய வைக்க வேண்டும்..
நாம் கேட்கும் நீர்
பிச்சையல்ல
"உரிமை"..

சாதி மதம் கடந்து
கன்னடனாக அவனிருக்க
நீதி தனை உணர்த்த
தமிழனாக இருப்பது தவறா ?
பிரிவினைவாதமா ?

ஐயாயிரம் வருடங்களாக
தமிழனாக இருந்தவர்கள்
என்பதை மறந்து,
இருநூறு வருடங்களாகத் தான்
இந்தியன் என்கிறோம்...

வந்தாரை வாழ வைக்கும்
தமிழகமாம் இது...
வந்தாரை மட்டுமே
வாழ வைக்கும் தமிழகமாக
மாறியது எப்போது ???

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

--
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

ஒரு க(விதை)டிதம்......

மௌனத்தையும்
முறைப்பையும் தவிர
வேறெந்த பதிலும்
தராத அன்பானவளக்கு...
 
விடை எதிர்பார்த்து
உடைந்த நெஞ்சுடன்,
எழுதும் கடிதம்...

ஏன் பதிலேதும்
இல்லை....?

உன் பதிலைக் கூட
பெற முடியாதவனாகிப்
போய்விட்டேனா நான் ?

அர்த்தம் இழந்த
வார்த்தைகளாக
எனது கவிதைகள்
என்னுள் மட்டும் பரவி
உயிரைத் துருவி
எழுத்துக்காளாகவே
வாழ்ந்த போதும்

அதை தமிழுக்கு தான்
கொடுக்கிறோம்
என்கிற நினைவு ஒன்றே
என்னை இன்னும்
எழுத தூண்டுகிறது...

தமிழ் வளர்க்க
தன்னையும் அழிப்பான் தமிழன்
என்று எனக்கொரு மூடநம்பிக்கை...

எண்ணங்கள் வளர
எழுத்துக்கள் மிளிர
சின்னங்களாக
என் கவிதைகள்
உன்னை ஞாபகப்டுத்துகின்றன..

வாழ்க்கை நீரோட்டத்தில்
எல்லாம் மறந்து விடும்
என எல்லோரும்
சொன்னதை
ஏற்க முயன்று
பின் ஏமாந்தேன்..

நீ வாழும் உலகில்
நானும் இருக்கிறேன்
என்கிற குட்டி
மகிழ்ச்சியுடன்......

இப்படிக்கு,

தேயும் நிலவின்
வேதனை உணரந்திட
தானும் தேய்ந்திட விரும்பும்
மடத்தனமான மானிடன்,
உன் காதலன்.....

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Saturday, February 10, 2007

அவள்..

அவள்..

'உதாசினம் ' என்கிற
வார்த்தையின்
உள்அர்த்தம்
புரிய வைத்தவளே...

உன்னால்
அந்த வார்த்தையின்
அர்த்தம் மட்டுமல்ல
ஆழமும் புரிந்தது...

விலகி விடு என
உன் பார்வையால்
நீ கட்டளையிடுவதை,
புரிந்து கொண்டாலும்

ஏற்க மறுக்கும்
என் நெஞ்சத்திடம்
எப்படி சொல்வேன் ?
இதை...

முடிவாக..
முற்றுப்புள்ளியெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பம் தான், பெண்ணே...!

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************