"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
எனது கிறுக்கல்களின் தொகுப்பு கவிதையாக இணையத்தில்......
எழுதியவர் : Unknown at 11:45 PM 0 கருத்துக்கள்
எதிர்காலக் கனவுகள்
என்னவென்று அறியாமல்
புதிர்கேள்வி ஏதுமின்றி
பூக்களொடு உறங்குகிறாள்
என் தேவதை...
சிரித்தாலும் அழுதாலும்
சிறகடிக்க பறந்தாலும்
சித்திரமாய் தோன்றும்
சின்னஞ்சிறு புதுக்கவிதை...
எழுதியவர் : Unknown at 2:30 AM 0 கருத்துக்கள்
பாசப் பிணைப்புடன்
உன் கைகளில் இருக்கும்
பனித்துளிகள் தான்
உன்னை எண்ணி வியக்கிறது...
"நாம் விழுந்தது கைகளிலா
அல்லது மலர் மெத்தையிலா என.."
எழுதியவர் : Unknown at 4:25 AM 0 கருத்துக்கள்
எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..
எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..
'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...
வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..
பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..
என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...
எழுதியவர் : Unknown at 10:39 PM 1 கருத்துக்கள்
'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..
அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...
கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..
புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..
உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..
மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..
வா தமிழனே.. வென்று காட்டுவோம்...
***********************************************எழுதியவர் : Unknown at 9:50 PM 0 கருத்துக்கள்