THOUSANDS OF FREE BLOGGER TEMPLATES »

Tuesday, December 18, 2007

நினைவுகளின் சுமை (கவிதை)

நினைவுகளின் சுமை
க.அருணபாரதி
 
நினைவுகளின் சுமையால்
நகர்கிறது வாழ்க்கை..

நிலைக்காது எனத்தெரிந்தும்
அடங்காத வேட்கை..
 
இமைகளின்  துடிப்போடு
இயங்கிடும் நாட்கள்..
 
இனியவள் பிரிவாலே
வழியெங்கும் முட்கள்..
 
வனங்களில் திரிகின்ற
விலங்குகள் போல
 
மனம் அலைகிறதே
உன்நிழல் தேடி..
 
சினங்களை மறைத்தேன்
சிரித்தேன் திரிந்தேன்
 
கனவினில் உன்னோடு
கதை பேசியபடி..
 
துன்ப வெயிலில்
கால் சிவந்தபோது
 
தூரிகையாய் மனதை
வருடிய கனவே..
 
இன்பத் தமிழிலே
உனைபாடித் திரிவேன்
 
இருந்தாலும் இறந்தாலும்
இதுவென் உணவே...
 

Monday, December 17, 2007

தமிழா உன்கொடி ஏறுமடா...

தமிழா உன்கொடி ஏறுமடா...
தாய் போல
தன்னுடைய
தாய்மொழியை
நேசித்தவன்..
 
வாய்ப் பேச்சால்
உலகத்தையே
வாயடைக்க
செய்தவன்..
 
தீயருக்கும்
திகட்டாமல்
விருந்தோம்பல்
படைத்தவன்..
 
நேயம் கொண்டு
எறும்பிற்கும்
அரிசிமாக் கோல
உணவு கொடுத்தவன்..
 
சங்கம் வளர்த்து
தன் மொழியை
சரியாமல்
வளாத்தவன்..
 
எங்கும் இன்று
அடிபட்டு ஓயாமல்
அழுபவன்..
 
தமிழன்..
 
ஈழத்தில் ஓங்கிநிற்கும்
உன் கையை
பலப்படுத்து..
 
ஈனத்துரோகிகளை
கண்டெடுத்து
தளைபடுத்து...
 
வானத்தில் மலர்த்தூவ
உன்கொடி ஏறுமடா...
அந்நாளில் உன்புகழை
உலகமே கூறுமடா...

 

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, November 6, 2007

பிரிசேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கக் கவிதை

புறநானூற்று வீரத்தை
எழுத்துக்களாகவே  
பார்த்த நமக்கு
"இது தான் அது"வென
இடிததுரைத்தது
புலிகள் இயக்கம்..
 
தமிழனின் சீற்றத்தால்
சிதறி ஓடிய சிங்களம்
தனக்கே உரிய
கோழைத்தனத்தை
கொலை செய்து
காட்டிவிட்டது...
 
சமாதானத்தின் மீது
நாளும் நம்பிக்கை
வைத்து
பேச்சினை நம்பியவரின்
மூச்சையே நிறுத்திவிட்டது..
 
மாறா புன்னகையுடனும்
மாசற்ற மனதுடனும்
வீரனாய் வாழ்ந்த
நம் செல்வனை
இழந்து விட்டோம்..
 
ஆறாக் காயங்களை
தாங்கிநிற்கும் மண்ணில்
வேறாய் ஓடுகின்ற
லட்சிய வேட்கைக்கு
வீரனே உம்மை
உரமிட்டோம்..
 
கண்களில் நீர்ததும்ப
கனல்களால் நெஞ்சம்
வெதும்ப,
உன்முகம் லட்சியத்தை
அடைந்திட சொல்கிறது..
 
"இந்தி்"யத் தமிழனாக
ஏதும் செய்திட இயலாமல் 
நிற்கும எம்மை,
வெட்கம் கொல்கிறது..
 
எத்தனை
துயர் வந்தாலும்
எத்ததனை
தடை வந்தாலும்
அத்தனையும் உடைந்திட
தமிழ்ஈழம் 
நிச்சயம் எழும்..
 
பித்தனை போலவே
பிறழ்ந்து திரியும்
அரசியல்வாதிகளின்
போலி முகங்களில்
முத்திரை பதிக்கும்
அடி விழும்..
 
மரணத்தை எண்ணி
மனம் நோவதைவிட
இனம் காக்க எழுந்தால்,
வரலாறு நம்மை
வரவேற்கும்..
 
நிச்சயமாய் பிறக்க போகும்
ஈழத்தின் வாசலிலே
தமிழ்ச்செல்வனின்
புன்னகையும்
அன்போடு அதை
அலங்கரிக்கும்..
 
பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு
எங்கள் வீரவணக்கம் !
 
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Sunday, October 14, 2007

பிரிவெனும் தண்டனை - க.அருணபாரதி

பிரிவெனும் தண்டனை  - க.அருணபாரதி

எத்தனை நாள
காத்துக் கிடப்பது?
 
வருவாய் என்றெண்ணி
வருத்தங்களோடு நெஞ்சில்
கருவாய் அமர்ந்திருக்கும்
அன்பான காதலியே...
 
எத்தனை நாள
காத்துக் கிடப்பது?
 
மலர்களின் சத்தத்திலும்
மழலைகள் முத்தத்திலும்
உணராத சந்தோஷம்
உன் பார்வையில்
கண்டேனடி...
 
அதற்கு தான் இந்த
பிரிவெனும்
தண்டனையா?
 
நினைவுகள்
குத்திக் கிழித்த
நேரங்களின் தொகுப்பாக
மாறியது வாழ்க்கை..

நீ விட்டுவிட்டு போன
இடங்களில் எல்லாம்
நினைவுகள் வாழ்கின்றன..
 
நீ திட்டிவிட்டு சென்ற
இடங்களில் எல்லாம்
திகைக்க வைக்கின்றன..
 
நேற்று நடந்தவற்றை
அசைபோடும் அளவிற்கு
காற்றை போலவே
காலமும் செல்கிறது..
 
பேச நினைத்தவற்றை
உன்னிடம் பேசாமல்
கோட்டை விட்ட
நிமிடங்கள் இன்று
சாட்டையடி கொடுக்கின்றன
நினைவுகளாக....
 
நகர்ந்து செல்கிற
நாட்கள் எல்லாமே
நகராத நினைவுகளால்
நரகம் ஆகிறது..
 
தகர்ந்த கனவுகளின்
கோட்டைச் சுவற்றிலே
திகட்டா உன்முகம் தெரிய
உள்ளம் நோகிறது...
 
தவறென்ன செய்தேன்
தெரியாமல் மனமும்
துவள்கிறது உடல்
துக்கத்தில் தினமும்..
 
வாழ்க்கை பாதையில்
ஆயிரம் முட்களாம்..
ஒற்றை ரோஜாநீ
உன்னைக் கடந்திடவே
இத்தனை வலியென்றால்,
முட்களை கடக்கும்வரை
வாழ்வேனா நான்?
 
வாழ்வேன்..
பூக்களும் முட்களும்
பாதையில் இருந்தாலும்
காலம் என்கிற
காலனி அணிவேன்
நான்..

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அரு ணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, August 28, 2007

மறக்க முடியாதவை...

 உன் ஆடை நிறமும்
என் ஆடை நிறமும்
ஒன்றாக இருந்ததென
மகிழ்வோடு சுட்டிக்காட்டி
''சாக்லேட்" பரிசுகேட்ட
சந்தோஷான நிமிடங்கள்...
 
பொங்கல் விடுமுறைக்கு
வீட்டுக்கு செல்லும்முன்
பேருந்து நிறுத்தத்தில்
உன்னிடம் வாழ்த்துபெற
நீவரும் நேரம்பார்த்து
நின்றிருந்த நிமிடங்கள்...
 
எங்கள் ஊர்நிகழ்ச்சிக்கு
எதிர்பாராமல் வந்தபோது
என்வீட்டு செல்லமாக
வலம்வந்த குழந்தையிடம்
அன்போடு பேசிய
அழகான நிமிடங்கள்...
 
நிலநடுக்கத்தால் எழுந்த
அலைகடல் சீற்றத்தில்
ஊரே பாதித்தபோது
உள்மனம் உனைக்கேட்க
தொலைபேசி வழியாக
நலம்கேட்ட தருணங்கள்...
 
வாழ்வோடு கலந்துவிட்ட
நிமிடங்கள் பலஇருந்தும்
வார்த்தைகள் பலிக்காமல்
நான் இங்கே..நீ அங்கே..
 
----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Tuesday, June 12, 2007

என் வாழ்வில்..

என் வாழ்வில்..
 
கனவுக்கும் காற்றுக்கும்
கட்டுப்படாத என்மனம்
உணவாக உட்க்கொண்டது
உன் நினைவை
மட்டும் தான் பெண்ணே...
 
சினங் கொண்டு
சித்திரமாய் நீமுறைத்த
பார்வையிலும் கூட
அதை ரசித்து மனம்வெதும்பி
சிரித்தேனே பெண்ணே.......
 
தினமும் உன்னை
தித்திக்க நினைத்துவாழ்
உயிரினமாய் நான்,
எப்பொழுது மாறினேன்
தெரியவில்லை பெண்ணே....
 
எனக்காக என்வாழ்வில்
நீதந்த மாற்றங்கள்
உனக்காக என்வாழ்வை
தரநினைத்தால் ஏமாற்றங்கள்..
மனக்கணக்கு விதியை
யாரேனும் மாற்றுங்கள்....
 
மாற்றம் ஒன்றே
மாறாதது..
மார்க்ஸ் சொன்னது
பொருந்தாது...
 
தோழமையுடன்
க.அருணபாரதி

Friday, May 25, 2007

நன்றியும் வருத்தமும்.. - கவிதை

நன்றியும் வருத்தமும்..
க.அருணபாரதி
 
வார்த்தைகள் அடங்கி
மெளனமாய் வருத்தும்
இரவின் நேரத்தின்
இனிமையான
இடைவெளிகளில்
நுழைந்து சிரிக்கிறது
உன் நினைவு..
 
பிரிவின் காரணமாய்
கசப்புற்ற மனம்
கவிதையாக எழுந்தது..
கண்ணீர் விட்டும்
சிலநேரம்
அமைதியாய் அழுதது..
 
நிசங்களை ஏற்கும்
பக்குவம் அதற்கில்லை..
நித்திரை நேரமென்ற 
எல்லைகளும் இல்லை..
 
பத்திரமாய் பதிந்துவிட்ட
பகல்கனவாய் என்காதல்,
சித்திரங்கள் போலவே
சிந்தையில் சிரிக்குதடி..
 
அன்பினால் அகப்பட்டு
அதன்வலியை உணரும்
அனுபவத்தை தந்த
காதலுக்கும் காதலிக்கும்
வருத்தங்களுடன் நன்றி..
நன்றியுடன் வருத்தங்கள்..
 
என்றும் நட்புடன்,
க.அருணபாரதி

Sunday, March 25, 2007

வான்படை வாளுருவியது...

வான்படை வாளுருவியது...
 
சிங்கள இராணுவம்
சித்தம் கலங்கிட
தமிழரின் வான்படை
கொடுத்த அடியில்
 
எங்கட மக்களை
ஏதிலி ஆக்கிய
சிங்கள படைகள்
விழந்தது காண்..
 
தேன்மொழித் தமிழின்
மானங்காத்த வீரர்கள்
வான்படை கொண்டு
வாளுருவியது காண்...
 
எட்டி உதைத்து
இறுமாப்பு கொண்ட
சிங்கள வெறியரின்
சீற்றத்தை தாங்கி
 
உலக சமூகத்தின்
பார்வைக்கு ஏங்கி
எத்தனை வருடங்கள்
கைக்கட்டி நிற்க ?
 
சிங்களன் செய்தால்
உள்நாட்டு போராம்
சீற்றத்துடன் தமிழன்
செய்தால் தீவிரவாதமா ?
 
பாகிஸ்தான் தருகிறான்
அமெரிக்கா தருகிறான்
பார்க்காமல் விட்டால்
இந்தியனும் தருகிறான்..
 
தமிழர் படைகண்டு
தானாய் நடுங்கிஓடும்
சிங்களன் ஆயுதமே
போதுமடா தமிழர்க்கு...
 
லட்சிய போராளிக்கு
பொருட்டல்ல மரணம்..
ஈழம் வெல்லட்டும்
இதுதான் தருணம்...
 
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

Thursday, March 15, 2007

சின்னஞ்சிறு புதுக்கவிதை...

எதிர்காலக் கனவுகள்
என்னவென்று அறியாமல்
புதிர்கேள்வி ஏதுமின்றி
பூக்களொடு உறங்குகிறாள்
என் தேவதை...

சிரித்தாலும் அழுதாலும்
சிறகடிக்க பறந்தாலும்
சித்திரமாய் தோன்றும்
சின்னஞ்சிறு புதுக்கவிதை...

-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------

Tuesday, March 13, 2007

பனித்துளிகள் வியக்கிறது...

இயற்கை அளித்த
கொடையான பனித்துளிகளை
கையில் ஏந்தி வியக்கும்
சின்னஞ்சிறு பெண்ணே...

பாசப் பிணைப்புடன்
உன் கைகளில் இருக்கும்
பனித்துளிகள் தான்
உன்னை எண்ணி வியக்கிறது...


"நாம் விழுந்தது கைகளிலா
அல்லது மலர் மெத்தையிலா என.."


-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
http://www.arunabharathi.blogspot.com/
-----------------------------------------------------------


Wednesday, March 7, 2007

மகளிர் தின வாழ்த்துக்கள்...

மகளிர் தின வாழ்த்துக்கள்...
எல்லோர் வீட்டிலும்
இறைவனின் பிரதிநிதியாய்
அன்னை..

எல்லோர் வாழ்விலும்
உள்ளன்பின் பிரதிநிதியாய்
தோழி..

எல்லோர் வீட்டிலும்
தனக்கே பிரதிநிதியாய்
மனைவி..

'எங்கெங்கு காணினும் சக்தியாடா'
பாடிய கவிஞனின் பாட்டின்
பிரதிநிதியாய்
வளர்ந்து வரும் 'பெண்ணியம்'...

வாழ்த்துவதோடு முடியாமல்
பெண்களை வாழவைப்பது பற்றி
சிந்திப்போம்..

பெண்களை போதையாய்
காட்டும் சினமா கயவர்களை
நிந்திப்போம்..

என் வாழ்வின் அனைத்து பக்கங்களிலும் விடாது
பற்றி கொண்டிருக்கும் அனைத்து மகளிருக்கும்
என் அன்பான மகளிர் தின வாழ்த்துக்கள்...

 
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Tuesday, March 6, 2007

லட்சியம் வெல்லுமடா..

லட்சியம் வெல்லுமடா..
 
முற்றுப்புள்ளிகள் எல்லாம்
முடிவுரை அல்ல..
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பமே...

'தோல்வி - சோர்வு '
இவையெல்லாம் உனை
பயங்கொள்ள வைக்கத் தான்
படைக்கப்பட்டன..

அரிசிமாவுக் கோலமிட்டு
எறும்புக்குகூட பசியாற்றிய
தமிழன் தான் இன்று
தன் மண்ணிலேயே அகதி...

கலங்காதே தமிழனே..
லட்சியம் வெல்லும்
நிச்சயம் ஒரு திகதி..

புல்கூட மிதி பட்டால்
எழுந்து தானாய் நிற்கும்..
புல் அல்லநீ  தமிழா
நீ புலிப்படையின் வர்க்கம்..

உணர்ந்து நீ எழுந்தால்
உலகம் உனது சொர்க்கம்..

மூவேந்தர்கள் வளர்த்த நம்
மூதாதையர் மொழியை
பாவேந்தர் சொற்படி
பாரெங்கும் பரப்புவோம்..

வா தமிழனே.. வென்று காட்டுவோம்...

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Wednesday, February 21, 2007

மழைத்துளியும் ஏங்குதடி...

மழைத்துளியும் ஏங்குதடி...

உன் மேல்
உள்ள ஆசையில்
தானோ என்னவோ
நீ உலா போக வெளியே
வரும் பொழுது தான்
கருகருக்கிறது வானம்,
மழையாய் உன்னை
முத்தமிட...

மழைத்துளிகள் மேலே
படாதவாறு குடை கொண்:டு
தடுத்தாய் நீ...

ஆசையோடு வந்த
மழைத்துளிகள் கீழே விழுந்து
கண்ணீர் விட்டன..

தன் பலத்தைக் காட்டி
உன்னை மயக்க
நினைத்தது மின்னல்..

உன் சிரிப்பைக்
கண்டு அதற்கும்
வந்தது இன்னல்..

உன் பாதம் பட்டு
உரசிச் சென்றதால்
மழைத்துளிகள் மோட்சம்
அடைந்து
நதியில் கலந்தன..

 மழையைக் கூட
மகிமைப் படுத்தி
எழுதச் சொல்வது
காதல்..

எழுதும் போது
வான் மேகம் போல
வார்த்தைகளுக்குள் மோதல்.....

வானத்தில் மட்டுமல்ல
என் மனதிலும்,
மழை..

 
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Tuesday, February 13, 2007

உரிமையைக் கேட்டால்...

உயிர்க் காக்கும் விவசாய
பயிர் வளர்க்க நீரில்லை..

உயர்-உச்ச நீதிமன்ற
உத்தரவிட்டும் கூட
உரிமையான நீரைப்
பெற்றுத் தர ஆளில்லை...

அரசியலின் பெயராலே
தமிழனின் வாழ் வழித்து
வாக்கு மட்டும் வாங்க வரும்
வக்கற்ற கட்சிகளுக்கு
புரிய வைக்க வேண்டும்..
நாம் கேட்கும் நீர்
பிச்சையல்ல
"உரிமை"..

சாதி மதம் கடந்து
கன்னடனாக அவனிருக்க
நீதி தனை உணர்த்த
தமிழனாக இருப்பது தவறா ?
பிரிவினைவாதமா ?

ஐயாயிரம் வருடங்களாக
தமிழனாக இருந்தவர்கள்
என்பதை மறந்து,
இருநூறு வருடங்களாகத் தான்
இந்தியன் என்கிறோம்...

வந்தாரை வாழ வைக்கும்
தமிழகமாம் இது...
வந்தாரை மட்டுமே
வாழ வைக்கும் தமிழகமாக
மாறியது எப்போது ???

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

--
***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

ஒரு க(விதை)டிதம்......

மௌனத்தையும்
முறைப்பையும் தவிர
வேறெந்த பதிலும்
தராத அன்பானவளக்கு...
 
விடை எதிர்பார்த்து
உடைந்த நெஞ்சுடன்,
எழுதும் கடிதம்...

ஏன் பதிலேதும்
இல்லை....?

உன் பதிலைக் கூட
பெற முடியாதவனாகிப்
போய்விட்டேனா நான் ?

அர்த்தம் இழந்த
வார்த்தைகளாக
எனது கவிதைகள்
என்னுள் மட்டும் பரவி
உயிரைத் துருவி
எழுத்துக்காளாகவே
வாழ்ந்த போதும்

அதை தமிழுக்கு தான்
கொடுக்கிறோம்
என்கிற நினைவு ஒன்றே
என்னை இன்னும்
எழுத தூண்டுகிறது...

தமிழ் வளர்க்க
தன்னையும் அழிப்பான் தமிழன்
என்று எனக்கொரு மூடநம்பிக்கை...

எண்ணங்கள் வளர
எழுத்துக்கள் மிளிர
சின்னங்களாக
என் கவிதைகள்
உன்னை ஞாபகப்டுத்துகின்றன..

வாழ்க்கை நீரோட்டத்தில்
எல்லாம் மறந்து விடும்
என எல்லோரும்
சொன்னதை
ஏற்க முயன்று
பின் ஏமாந்தேன்..

நீ வாழும் உலகில்
நானும் இருக்கிறேன்
என்கிற குட்டி
மகிழ்ச்சியுடன்......

இப்படிக்கு,

தேயும் நிலவின்
வேதனை உணரந்திட
தானும் தேய்ந்திட விரும்பும்
மடத்தனமான மானிடன்,
உன் காதலன்.....


***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Saturday, February 10, 2007

அவள்..

அவள்..

'உதாசினம் ' என்கிற
வார்த்தையின்
உள்அர்த்தம்
புரிய வைத்தவளே...

உன்னால்
அந்த வார்த்தையின்
அர்த்தம் மட்டுமல்ல
ஆழமும் புரிந்தது...

விலகி விடு என
உன் பார்வையால்
நீ கட்டளையிடுவதை,
புரிந்து கொண்டாலும்

ஏற்க மறுக்கும்
என் நெஞ்சத்திடம்
எப்படி சொல்வேன் ?
இதை...

முடிவாக..
முற்றுப்புள்ளியெல்லாம்
முடிவுரை அல்ல
அடுத்த வாக்கியத்தின்
ஆரம்பம் தான், பெண்ணே...!


***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************

Sunday, January 28, 2007

ஈழம்

ஈழம் என்றாலே
கண்ணில் ஈரம்
சுரந்தது  அன்று...

ஈழம் என்றாலே
நெஞ்சில் வீரம்
பிறக்கிறது இன்று..

'தம்பியுடையான் படைக் கஞ்சான்'
நூற்றாண்டுகள் கடந்தும்
அர்த்தம் இழக்காத வாக்கியம்...

வீடும் வாழ்வும் இழந்து
நாடும் இல்லையென
துரத்தப்பட்டு
சொந்த மண்ணிலேயே
நாடோடியாய்
சிங்களக் கயவரால்
நிந்திக்கப்பட்ட
எங்கள் தமிழ்மக்கள்
எழுந்தனர் புலிகளாய்....

வீரத்திற்கு பெயர் போன
தமிழினப் புதல்வர்களின்
வாளுக்கு பதில் சொல்ல
வக்கற்ற சிங்களர்கள்
கூச்சலிட்டனர்,
தம் மண்ணில் பயங்கரவாதமாம்....

உரிமையைக் கேட்டு
உறுமி எழுந்தால்,
அடிமை நிலைப் போக்க
அதட்டி யெழுந்தால்
அதற்கு பெயர்
பயங்கரவாதமா ?

பன்னாட்டு ஏகாதிபத்திய
பார்ப்பனிய பனியா
ஊடகங்களுக்கு
இது தான் தீவிரவாதம்..

பன்னாட்டு நிறுவனங்களின்
பிச்சைக் காசின்
ருசியில் திளைக்கும்
மத்திய-மாநில அரசுகளுக்கு
அந்நாட்டு மக்கள்
பசியால் செத்து
பாடையில் போனாலும்
கவலை பிறக்காது...

லட்சியத்தை ஒருநாள்
நிச்சயம் அடைய
உண்மை நெறியுடன்
அன்பு வெறியுடன்
பேராடும் எம்படை
வெல்லும் ஒருநாள்..

அந்நாள்
உலகத் தமிழர்களின்
பொன்னாள்..

***********************************************
                தோழமையடன்
-----------------க.அருணபாரதி----------------
===www.arunabharathi.blogspot.com==
***********************************************